உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆகாசபாலம் பகுதி பள்ளத்தில் கவிழந்த சுற்றுலா வாகனம்

ஆகாசபாலம் பகுதி பள்ளத்தில் கவிழந்த சுற்றுலா வாகனம்

கூடலுார்: நடுவட்டம், ஆகாசபாலம் அருகே, சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில், எட்டு பேர் காயமடைந்தனர்.கர்நாடக மாநிலம், சிக்கால்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 16 பேர், 'டெம்போ' வாகனத்தில், 16ம் தேதி சபரிமலைக்கு சென்றுள்ளனர். தரிசனத்தை முடித்துவிட்டு, விரதத்தை முடித்துள்ளனர். தொடர்ந்து, 19ம் தேதி கன்னியாகுமரி வந்த இவர்கள், அங்கிருந்து ராமேஸ்வரம், பழனி கோவில்களுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் ஊட்டி வந்துள்ளனர்.ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, கர்நாடகா செல்வதற்காக, கூடலுார் நோக்கி வந்தனர். ஆகாசபாலம் அருகே, இவர்கள் வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், சிக்கலாபூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 35, சீனிவாஸ், 25, நாகராஜ், 37, நாசிமுத்து, 31, ஆதிநாராயணன், 28 உட்பட எட்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடுவட்டம் எஸ்.ஐ., குணசேகரன் விசாரணை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை