தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டெருமை
குன்னுார்; குன்னுாரில் உலா வரும் காட்டெருமை தேயிலை செடியை குத்தி துாக்கி வீசும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும் உணவு தேடி சென்று வருகிறது. இந்நிலையில், குன்னுார், 'ஐபீல்டு' பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை, ஆக்ரோஷத்துடன் தேயிலை செடியை குத்தி, வேரோடு பெயர்த்து துாக்கி வீசியது. இதனை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, காட்டெருமைகள் பல இடங்களிலும் ஆக்ரோஷத்துடன் உலா வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லவும், வாகனங்களை இயக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.