உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை துாக்கி வீசிய பெண் பலி

யானை துாக்கி வீசிய பெண் பலி

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கெங்கரை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நிர்மலா, 52. நேற்று காலை, பசுந்தேயிலை அறுவடை செய்ய அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது, புதர் மறைவில் இருந்த காட்டு யானை, அவரை தாக்கி துாக்கி வீசியது. பலத்த காயமடைந்த நிர்மலா சம்பவ இடத்திலேயே பலியானார். அருகில் இருந்தவர்கள் உடலை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வனத்துறையினர் ஆய்வு செய்து, உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை