உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் பனி பாதிப்பில் இருந்து மலர் தொட்டிகளை காக்க நடவடிக்கை

ஊட்டியில் பனி பாதிப்பில் இருந்து மலர் தொட்டிகளை காக்க நடவடிக்கை

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக தயார் படுத்தப்பட்டுள்ள, தொட்டிகளில் உள்ள மலர்கள், பனியால் பாதிக்காமல் இருக்க தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நுாற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள பழமையான மரங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் கார்டன், புல்வெளி மைதானம், மலர் மாடங்களில் பலவண்ண மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.இந்நிலையில், ஊட்டியில் பனிகாலம் தொடர்ந்து வரும் நிலையில் கோடை சீசனுக்காக தயார் படுத்தப்பட்டுள்ள, 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் உள்ள நாற்று; பூக்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காலை நேரத்தில் மலர் தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது. மேலும், தொட்டிகள் மீது 'பிளாஸ்டிக்' போர்வையால் மூடும் பணிகளும் அவ்வப்போது நடக்கிறது.தோட்டக்கலை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில்,'' கோடை சீசனக்காக மலர் மாடங்களில் உள்ள பூந்தொட்டிகள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பனியால் மலர் தொட்டிகள் பாதிக்காமல் இருக்க தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ