உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கேள்வி கேட்கும் திறன் வளர்த்து கொள்ள அறிவுரை

கேள்வி கேட்கும் திறன் வளர்த்து கொள்ள அறிவுரை

கூடலுார்: கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில், சூரிய புயல், விண்வெளி ஆராய்ச்சி, வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார். கருத்தரங்கில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் சூரிய புயல் விஞ்ஞானி மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர் மனோகரன், ‘சூரிய புயல் விண்வெளி ஆராய்ச்சி, வானிலை மற்றும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், சிக்கலான அறிவியல் கருத்துக்களை எளிமையாக புரிந்து கொள்வது,’ குறித்து மாணவர்களுடைய விளக்கினார். தொடர்ந்து, விண்வெளி ஆராய்ச்சி, வானிலை மாற்றங்கள் குறித்து மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு தெளிவாகவும் எளிமையாகவும் பதில் கூறியதுடன், ‘கேள்வி கேட்கும் திறன் மற்றும் ஆராய்ச்சி ஆர்வத்தை வளர்த்து கொள்வதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில், அறிவியலில் சாதிக்க முடியும்,’ என, அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், 225 பள்ளி மாணவர்கள், 50 கல்லுாரி மாணவர்கள் 12 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ