உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிட்டு குருவிகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்; பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

சிட்டு குருவிகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்; பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

ஊட்டி; சர்வதேச சிட்டு குருவிகள் தினம், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், ''சிட்டு குருவிகளுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி சிறந்த வாழ்விடமாக உள்ளது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் சிட்டு குருவிகளுக்கு கூடமைத்து அவற்றின் இனம் அழியாமல் பார்த்து கொள்வது அவசியம்,''என்றார்.மக்கள் விழிப்புணர்வு சங்க நிறுவனர் ஜனார்த்தனன் பேசுகையில்,''கான்கிரீட் கட்டடங்கள் அதிகரித்தால், சிட்டு குருவிகளின் வாழ்விடங்களை இழந்து அழிந்து வருகின்றன. இவற்றை அழிவிலிருந்து காக்க மாணவர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார் ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் பேசுகையில், ''இயற்கையை பாதுகாக்க முக்கியத்துவம் வாய்ந்த சிட்டு குருவிகளை பாதுகாக்க மாணவர்களும், மக்களும் வீடுகளில் கூடு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் சிறு தானியங்களை அதிக அளவில் சிட்டு குருவிகளுக்கு தர வேண்டும். வெயில் காலங்களில் நீர் வைக்க வேண்டும்,'' என்றார். முன்னதாக இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், சிட்டு குருவிகளுக்கு கூடுகட்ட தேவையான வைகோல் கூடுகள், பள்ளி கட்டடங்களில் வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை