மேலும் செய்திகள்
வனவிலங்கு வார விழா; சாலையோர குப்பை அகற்றம்
06-Oct-2025
கூடலுார்; நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகம் தெப்பக்காடு பகுதியில் கடந்த மாதம் உயிரிழந்த, ஆறு காட்டு பன்றிகளுக்கும், ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் நோய் தாக்குதல் இருப்பது, ஆய்வக சோதனையில் உறுதியானது. இந்நோய், மனிதர்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு பரவாது என்பதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். நீலகிரி கலெக்டர் லட்சுமிபவ்யா கூறுகையில், ''முதுமலையில் காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது. இந்நோய், மற்ற விலங்குகளுக்கு பரவாது என்பதால், கால்நடை வளர்ப்பவர்கள், பழங்குடியினர் உட்பட மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், பன்றி வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.
06-Oct-2025