உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அ.தி.மு.க., பூத் கமிட்டி பணி; முன்னாள் அமைச்சர் ஆய்வு

அ.தி.மு.க., பூத் கமிட்டி பணி; முன்னாள் அமைச்சர் ஆய்வு

கோத்தகிரி; கோத்தகிரி அருகே நடந்த அ.தி.மு.க., பூத் கமிட்டி பணி குறித்த ஆய்வு நடந்தது. ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்குச்சி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள, 11 பூத்களின் நிர்வாகிகளின் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட பதிவுகள் கள ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின், களஆய்வு கூட்டம் ஒன்னதலை கிராமத்தில் நடந்தது. ஜெ., பேரவை செயலாளர் பசுவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் வேலுசாமி பேசுகையில், ''பூத் கமிட்டியில் இடம் பெற்றுள்ள அனைவரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஓட்டுக்களை பெற ஆயத்தமாக வேண்டும்,''என்றார். கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உட்பட, பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் பெள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !