ஊட்டியில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் : 400 பேர் கைது
ஊட்டி : ஊட்டியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நேற்று, மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி இணை செயலாளர் நந்தகுமார், கூடலுார் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு, மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க., அரசுக்கு கண்டனம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட, 400 கைது செய்யப்பட்டனர்.