உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மாணவியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு

குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மாணவியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு

குன்னுார்: குன்னுாரில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு மையம், பிராவிடன்ஸ் கல்லுாரி சார்பில், குன்னுார் பஸ் ஸ்டாண்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முகமூடி அணிந்த மாணவியர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பால்வினை நோய், எச்.ஐ.வி., குறித்த பயம், எச்.ஐ.வி., யால் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்தல் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட திட்ட மேலாளர் அறிவழகன், ஐ.சி.டி.சி ஆலோசகர் நந்தகுமார், எஸ்.டி.ஐ., ஆலோசகர் ஜெபராஜ், கல்லுாரி பேராசிரியர்கள் அமுதா, சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை