தீயில் எரிந்த பழமையான மரம்; அணைத்த தீயணைப்பு வீரர்கள்
குன்னுார் : குன்னுார் வண்டிச்சோலையில் ஏற்பட்ட தீ காரணமாக, இரு மரங்கள்; செடிகள் எரிந்தன.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் சில இடங்களில் வனத்தீ ஏற்படுகிறது. குன்னுார் வண்டிச்சோலை வட்டப்பாறை அருகே நேற்று காலை, 10:00 மணியளவில் ஏற்பட்ட வனத்தீ காரணமாக, இரு மரங்கள் எரிந்தன. தகவலின் பேரில், அங்கு சென்ற குன்னுார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருகில் மின் கம்பங்கள் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள் மின்தடை ஏற்படுத்தி பிறகு சரி செய்தனர்.