உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அருவியில் குழந்தைகளுடன் குளியல்; அறிவிப்பு பலலை வைப்பது அவசியம்

அருவியில் குழந்தைகளுடன் குளியல்; அறிவிப்பு பலலை வைப்பது அவசியம்

பந்தலுார்; பந்தலுாரியில் இருந்து, ஊட்டி மற்றும் மலப்புரம், வயநாடு செல்லும் சாலையில் நீர்மட்டம் காட்சி முனை அமைந்துள்ளது. அதில், சாலையில் மேல்பகுதியில், வனத்திற்கு மத்தியில் உயரமான பகுதியில் இருந்து தண்ணீர் அருவியாக கொட்டி வருகிறது. மழை பொழிவு அதிகமாக இருக்கும் நேரத்தில் தண்ணீரோடு, பாறைகள் மற்றும் மண் அதிகமாக வரும். ஆனால், இதனை உணராத உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள், அருவியை ரசிப்பதுடன் தண்ணீரின், நடுப்பகுதியில் சென்று, 'செல்பி' எடுப்பது மற்றும் 'வீடியோ' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பாறை அல்லது மரங்கள் தண்ணீரில் உருண்டு வந்தால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். மக்கள் கூறுகையில்,' இந்த பகுதியில் மேல் பகுதிக்கு யாரும் ஏறி செல்லக் கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவும், மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டியது அவசியம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை