உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லாட்ஜில் வேட்டை தடுப்பு காவலர் மரணம்

லாட்ஜில் வேட்டை தடுப்பு காவலர் மரணம்

கோத்தகிரி; கோத்தகிரி தனியார் லாட்ஜில் வேட்டை தடுப்பு காவலர் மரணம் அடைந்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர். கோத்தகிரி அரவேனு காமராஜ் நகரை சேர்ந்த கவுதம்,32. திருமணமாகாத இவர், கடந்த, 10 ஆண்டு களுக்கு முன்பு, வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது, கட்டபெட்டு வனச்சரகத்தில் பணியில் இருந்து வந்தார். இந்நிலையில், 6ம் தேதி கோத்தகிரி காமராஜர் சதுக்கம் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கியுள்ளார். நேற்று காலை, லாட்ஜ் ஊழியரிடம் உணவு தேவைப்படுவதாக கூறி, அறைக்குள் சென்ற அவர், கழிவறையில் தவறி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆய்வு செய்த போது, அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !