உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தற்காலிக பட்டாசு கடைக்கு அக்., 10க்குள் விண்ணப்பிக்கணும்

தற்காலிக பட்டாசு கடைக்கு அக்., 10க்குள் விண்ணப்பிக்கணும்

ஊட்டி; 'தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் அக்., 10 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: தீபாவளி பண்டிகை அக்., 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள், http://www.tnesevai.tn.gov.inஇணை யதள வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் வாயிலாக உரிய ஆவணங்களுடன் அக்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ--சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும்; நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போர் பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை