மேலும் செய்திகள்
5 தாலுகாக்களில் ஜமாபந்தி; 678 மனுக்கள் வழங்கல்
23-May-2025
ஊட்டி; நீலகிரியில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமான பெண்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.நீலகிரியில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. குன்னுாரில் கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கோத்தகிரியில் சப் - கலெக்டர் சங்கீதா, கூடலுாரில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், பந்தலுாரில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுரேஷ் கண்ணன், குந்தாவில் ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஜமாபந்தி நடந்தது.குன்னூர் தாலுக்கா அலுவலகத்தில் நடந்த வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து பதிவேடுகளை சரிபார்த்தார், பின், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று கொண்டார். ஆறு தாலுக்காக்களில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடிநீர், சாலை வசதி என, ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.மகளிருக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் உரிமைத் தொகை பயனாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த முறை மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தற்போது நடந்து வரும் ஜமாபந்தியில் மகளிர் உரிமை தொகை கோரி ஏராளமான பெண்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். இம்முறையாவது வருவாய் துறையினர் விண்ணப்பத்தை உரிய முறையில் பரிசீலித்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என, பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.இன்று 11 ம் தேதி இரண்டாவது நாள் ஜமாபந்தி அந்தந்த தாலுக்காவில் நடக்கிறது.
23-May-2025