உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மொபைல் ஒப்படைப்பு: நேர்மைக்கு பாராட்டு

மொபைல் ஒப்படைப்பு: நேர்மைக்கு பாராட்டு

குன்னூர்: அருவங்காடு சாலையோரத்தில் டிரைவர் தவறவிட்ட மொபைல் போனை, ஓட்டல் உரிமையாளர் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் எல்லநள்ளி பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். பேரக்ஸ் பகுதியில் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அருவங்காடு வந்த இவர் தனது மொபைல் போனை தவறவிட்டுள்ளார். தொடர்ந்து போன் ரிங் செய்த போதும் யாரும் அதனை எடுக்கவில்லை. நேற்று அதிகாலை 5:00 மணியளவில், வெடிமருந்து தொழிற்சாலை கேட் அருகே ஓட்டல் உரிமையாளர் பிரதீஷ் மொபைல் போனை கண்டெடுத்தார். மைக்கேல் அந்த மொபைல் எண்ணில் அழைத்த போது விபரங்களை கேட்டறிந்து வரவழைத்தார். அருவங்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முபாரக் முன்னிலையில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டிரைவர் நன்றி தெரிவித்ததுடன், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி