உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் ராணுவ வீரர்கள் பைக்கில் விழிப்புணர்வு பேரணி

குன்னுாரில் ராணுவ வீரர்கள் பைக்கில் விழிப்புணர்வு பேரணி

குன்னுார்; குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டருக்கு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, 'எலக்ட்ரானிக்' பைக்கில் பேரணியாக, 'மெட்ராஸ்-2' பிரிவின் ராணுவ வீரர்கள் நேற்று வருகை தந்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்துதாஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வூதியதாரர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் ரமேஷ் பாபு, வில்லியம் ஜோசப், நாகராஜ், ஜெகதீஷ், ஜான் மார்ட்டீன், மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர். ராணுவ குழுவினர் கூறுகையில்,'கடந்த, 1776ம் ஆண்டு துவங்கப்பட்ட மெட்ராஸ்-2 பிரிவின், 250வது ஆண்டு விழா டிச., 11 முதல் 15 வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கேரளா, தமிழகத்தில், 26 மாவட்டங்களில் உள்ள, 2,500 முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடி குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. கடந்த, 18ம் தேதி துவங்கிய இந்த பேரணி செப்., மூன்றாம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவு பெறுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை