உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆர்செடின் பஸ் டிரிப் கட் ; காலை நேரம் பயணிகளுக்கு சிரமம்

ஆர்செடின் பஸ் டிரிப் கட் ; காலை நேரம் பயணிகளுக்கு சிரமம்

குன்னுார்; குன்னுார் ஆர்செடின், நான்சச் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. குன்னுாரில் இருந்து ஆர்செடின் வரை இயக்கப்படும் அரசு பஸ்சை நம்பி. இப்பகுதி ஏழை எளிய மக்கள் உள்ளனர். சமீப காலமாக இந்த பஸ் முறையாக இயக்கப்படுவதில்லை.இதனால், பணிக்கு செல்வோர், ஐ.டி.ஐ., கல்லுாரி பள்ளி மாணவ, மாணவியர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இரவில் இங்கு நிறுத்தும் அரசு பஸ், காலை, 6:05 மணிக்கு குன்னுாருக்கு இயக்கப்பட்டது. கண்டக்டர், டிரைவர்கள் தங்கும் அறையை சமீபத்தில் கரடி உடைத்தது. இதனை எஸ்டேட் நிர்வாகம் சரி செய்து, வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தும் இரவில் இங்கு அரசு பஸ் நிறுத்த டிரைவர், கண்டக்டர்கள் தயங்குகின்றனர். இந்த பஸ் அதிகாலையில், குன்னுார் டிப்போவில் இருந்து ஆர்செடினுக்கு, பயணிகளின்றி வருகிறது. இதன் பிறகு வரும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசலால் பலரும் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடிவதில்லை. எனவே, பழைய முறைப்படி ஹால்ட் பஸ் காலையில் இயக்குவதுடன், பயணிகளை அனைத்து இடங்களிலும் ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி