கலை திருவிழா போட்டி; அசத்திய மாணவர்கள்
பந்தலுார் ; அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளியே கொண்டு வரும் வகையில், கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதில், பந்தலுார் அருகே பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜிஸ்மரியா ஆண்டனி, மாவட்ட அளவிலான தனிநபர் நடிப்பு போட்டியில், 3-ம் இடம் பிடித்துள்ளார். 5-ம் வகுப்பு முகமது அஜ்மல் மெல்லிசை பாடல் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த ஆசிரியர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.