உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் பள்ளிகளுக்கான கலைத்தன்மை போட்டிகள்: 500 மாணவர்கள் பங்கேற்பு

கூடலுாரில் பள்ளிகளுக்கான கலைத்தன்மை போட்டிகள்: 500 மாணவர்கள் பங்கேற்பு

கூடலுார்: கூடலுாரில் நடந்த தனியார் பள்ளிகளுக்கான கலைத்தன்மை போட்டிகளில், 20 பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். கூடலுார் பாடந்துறையில் உள்ள, எம்.டி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கூடலுார் கல்வி மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான கலைத்தன்மை போட்டிகள் நடந்தது. போட்டிகளை பள்ளி முதல்வர் ஜெசிர் துவக்கி வைத்தார். போட்டிகளில் 20 தனியார் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, இசை, நடனம், ஓவியம், பேச்சு, இலக்கியம், அறிவியல் படைப்புகள் உள்ளிட்ட, 32 போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் ஹக்கீம் தலைமை வகித்தார். கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியனுக்கான முதல் மூன்று பரிசுகளை முறையே கூடலுார் ஜி.டி.எம்.ஓ., மேல்நிலைப் பள்ளி, எருமாடு சேக்ரெட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி, பாடந்துறை எம்.டி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் பெற்றன. விழாவில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை