மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
02-Apr-2025
ஊட்டி; நீலகிரி ஊராட்சி குடிநீர் குழாய் இயக்குபவர், உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி பணியாளர் சம்மேளனம் மாவட்ட செயலாளர் துரை தலைமை வகித்தார். பொருளாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜூ முன்னிலை வகித்தனர். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் போஜராஜ், ஏ.ஐ.டி.யு.சி., பொது செயலாளர் மூர்த்தி , நீலகிரி மாவட்ட சங்க பொது செயலாளர் ரகுநாதன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில்,'7 வது ஊதியக்குழு ஊதியம் மற்றும் நிலுவை தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்; குழு காப்பீடு தொகை, 110 ரூபாய் பிடித்தம் செய்து, குடும்ப நலநிதி, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; ஓய்வு கால பண பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும்,' உள்ளிட்ட, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
02-Apr-2025