மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாமில் மக்கள் பங்கேற்பு
20-Jan-2025
பந்தலுார்; பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில், வாழும் பணியர் சமுதாய பழங்குடியின மக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும், 'அடியாந்திரம்' எனும் நிகழ்வை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர்.நடப்பு ஆண்டிற்கான முதல் நிகழ்வு, பந்தலுார் அருகே அம்பலபாடி பழங்குடியின கிராமத்தில் நடந்தது. அதில், ஊர் மூத்தவர்கள் தலைமையில் மூன்று நாட்கள் விரதமிருந்து, பச்சை பந்தல் போட்டு அதில் விளக்கு எரியவிட்டு, தங்கள் கலாசார இசையுடன் நிகழ்ச்சியை இரு நாட்களுக்கு முன் துவக்கினர்.மூன்றாம் நாள் பூஜையில், மறைந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஆண் மற்றும் பெண்களுக்கு புனித நீர் தெளித்து, நீராடிய பின், புத்தாடைகள் அணிய செய்து, அலங்காரம் செய்த பின்னர் கையில் கத்தி, பிரம்பு, சந்தனம் கொடுத்து வரிசையாக வர செய்தனர். முன்னதாக சாமியாடி மூலம் முறத்தில் அரிசி எடுத்து வந்து முன்னோர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடந்தது. பின்னர், இசையுடன் அஞ்சலி செலுத்துபவர்களை, பந்தலை வலம் வர செய்தனர்.தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பின்னர் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. அதனையடுத்து பந்தலை பிரித்து தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அம்பலபாடி, பொன்னானி, குன்றில்கடவு, நெல்லியாளம், புலியாடி, கடலக்கொல்லி , ஓர்கடவு பழங்குடியின கிராம மக்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வேலன், செங்குட்டுவன்,வாசு, ராஜன்,விஜயன் உள்ளிட்டோர் தலைமையிலான கிராம மக்கள் செய்திருந்தனர்.
20-Jan-2025