உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

குன்னுார் : ஆன்லைன் மோசடி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் குன்னுாரில் நடந்தது.குன்னுார் உட்கோட்டம், நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மவுண்ட் பிளசன்ட் சமுதாய கூடத்தில் ஆன்லைன் மோசடி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.நீலகிரி எஸ்.பி., நிஷா தலைமை வகித்து, 'சமூக வலைதள மோசடிகள், பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள், பள்ளி கல்வி இடை நிற்றலால் ஏற்படும் தீமைகள்,' குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மவுன்ட் பிளசன்ட், ஓட்டுப்பட்டறை பகுதி மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை