மேலும் செய்திகள்
தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்காணல்
28-Dec-2024
கூடலுார்; கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி உள்ளக புகார் குழு சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, முதல்வர் (பொ) சுபாஷினி தலைமை வகித்தார். கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது பங்கேற்று, மாணவிகளின் பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, சமுதாய பணிகள் குறித்து பேசினர்.நிகழ்ச்சியில், கணினி துறை தலைவர் சுரேஷ்குமார், உடற்கல்வி இயக்குனர் கிஷோர்குமார், தேர்தல் நோடல் அலுவலர் வீராசாமி, உள்ளக புகார் குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், சுபாஷினி மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வணிகவியல் துறை தலைவர் விஜயசாருமதி நன்றி கூறினார்.
28-Dec-2024