விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோத்தகிரி : கோத்தகிரி சுண்டட்டி கிராமத்தில் பெண் விவசாயிகளுக்கு, பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.சி.பி.ஆர்., சுற்றுசூழல் கல்வி மையம் மற்றும் கருணா நிறுவனம் ஆகியவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயி மணி வரவேற்றார். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கள அலுவலர் குமாரவேலு தலைமை வகித்து பேசுகையில், ''இளைய தலைமுறையினர் தற்போது உணவு பாரம்பரிய உணவுகளை அதிகம் உட்கொள்ள மறந்து விடுகின்றனர். உணவு பழக்கத்தில் சத்தான உணவுகளை உண்ணாமல் இருப்பதால், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்க, சிறுதானியம் உட்பட சத்தான பாரம்பரிய உணவுகளை உண்ணுவது அவசியம்,'' என்றார்.