போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ஊட்டி; ஊட்டியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், 'போதை பொருட்களை பயன்படுத்துவதால், மூளை, இதயம், நரம்பு மண்டலம், கல்லீரல்பாதிக்கப்படுவதுடன், உடல் உபாதைகள் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் சிதைவதுடன், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நாசமாகும். குற்ற செயல்கள் அதிகரிப்பதுடன் இளைஞர்களின் எதிர்காலம் சிதைந்து சமுதாயம் சீர்குலையும். சமூகத்தின் நல்ல வழிகாட்டியான நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் போதையின் ஆபத்துகள் குறித்து பிறருக்கு எடுத்துரைத்து, அவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். போதையில்லாத வாழ்க்கையால், உடலும், மனமும் ஆரோக்கியமடைவதுடன், சமூகம் பாதுகாக்கப்படும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு அலுவலர்கள் உட்பட, பார்மசி கல்லுாரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.