மேலும் செய்திகள்
ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு ரயில், பஸ்கள்
09-Oct-2024
குன்னுார்: ஆயுத பூஜை விடுமுறை மற்றும் தீபாவளிக்கு பிறகு வார இறுதி நாட்களில், ஊட்டி-குன்னுார் மற்றும் ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார்- ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவதால், விடுமுறை தினங்களில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.ஆயுத பூஜை விடுமுறையையொட்டி வரும், 12, 13 தேதிகள் மற்றும் தீபாவளிக்கு பிறகு நவ.,2, 3ம் தேதிகளில், ஊட்டி-குன்னுார் மற்றும் ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.குன்னுாரில் இருந்து காலை, 8:20 மணிக்கும், ஊட்டியில் இருந்து மாலை, 4:45 மணிக்கும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.இதேபோல், ஊட்டியில் இருந்து கேத்திக்கு 'ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்' எனப்படும் சுற்று ரயில், 'காலை, 9:45; காலை, 11:35; மாலை, 3:00 மணி,' என, 3 முறை இயக்கப்படுகிறது.
09-Oct-2024