உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வழிப்பறியில் மிரட்ட துப்பாக்கி கைதானவர் பகீர் வாக்குமூலம்

வழிப்பறியில் மிரட்ட துப்பாக்கி கைதானவர் பகீர் வாக்குமூலம்

சூலுார்: துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர், வழிப்பறி செய்யும்போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கியதாக போலீசாரிடம் கூறினார். கோவை மாவட்டம், சூலுாரில் இரு நாட்களுக்கு முன் நடந்த செயின் பறிப்பு வழக்கில், கரூர் மாவட்டம், மணல் மேட்டைச் சேர்ந்த குணசேகரன், 62; பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் சானி, 22, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். நகையை மீட்க, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, 18 தோட்டாக்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். துப்பாக்கி எப்படி வந்தது என போலீசார் இருவரிடமும் விசாரித்தனர். விசாரணையில் குணசேகரன், திருட்டு, வழிப்பறி செய்யும்போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கியதாகவும், பீஹார் மாநிலம், பாகம்பர்பூரைச் சேர்ந்த விக்ரம் குமார், 25, என்பவரிடம் விற்பனை செய்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். விக்ரம் குமாரை, சூலுாரில் போலீசார் நேற்று கைது செய்தனர். பின், மூவரையும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை