குன்னுாரில் வனத்துறை கூண்டில் சிக்கிய கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பு
குன்னுார்: குன்னுார் நகரில் குடியிருப்புகளின் கதவுகளை உடைத்து வந்த கரடி யை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் உட்பட நகர பகுதியில் தற்போது காட்டெருமை சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்., மாதம் ஹாட்லி சாலையில் உள்ள வீட்டு கதவை உடைத்த கரடி உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்திய து. அதே பகுதியில், 12 வீடு களின் கதவுகளை இந்த கரடி உடைத்தது. வனத்துறை கூண்டு வைத்த போது கூண்டையும் உடைத்து 'எஸ்கேப்' ஆனது. உபாசி வளா கத்திற்குள், 14 முறை கரடி விசிட் செய்து கதவுகளை உடைத்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில் தலைமை வன உயிரின காப்பாளர், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், உபாசி, கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் கூண்டுகள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கன்னி மாரியம்மன் கோவில் தெரு அருகில் வைத்த கூண்டில் நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் கரடி சிக்கியது. குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில்,''பெட்போர்டு உபாசி மற்றும் குன்னுார் நகர பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக சுற்றி வந்த, கரடி, கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது,'' என்றார்.