உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டெருமைகளால் பைக், கார் சேதம்

காட்டெருமைகளால் பைக், கார் சேதம்

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவமையம் பகுதியில் இரு காட்டெருமைகள் மோதி சண்டையிட்டு, பைக்; கார்களை குத்தி சேதப்படுத்திய சம்பவம், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நேற்று முன்தினம் மாலையில் இங்கு இரு காட்டெருமைகள் மோதி சண்டையிட்டன. இதில், ஒரு காட்டெருமை தடுப்பு வேலியை உடைக்க முயற்சித்தது. அப்போது, வீட்டின் முன்புறம் நின்றிருந்தவர்களை விரட்டியது. அங்கிருந்த, பைக், ஸ்கூட்டிகள், கார்களை சேதப்படுத்தியது. வாகனங்களில் வந்தவர்கள் நிறுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !