உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மோப்ப நாய்க்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

மோப்ப நாய்க்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

கூடலுார் : முதுமலையில், வனத்துறை மோப்ப நாய் டைகரின், 4வது பிறந்த நாளை, வனத்துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.முதுமலை வனத்துறை சோதனை சாவடியில், 'வாகன சோதனை, வன குற்றங்களில் வனத்துறைக்கு உதவுவது,' உள்ளிட்ட பணிகளுக்கு மோப்பநாய் டைகர் உதவி வருகிறது. இதன், 4வது பிறந்த நாளை தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறையினர் கொண்டாடினர்.முதுமலை துணை இயக்குனர் வித்யா, கேக் வெட்டினார். தொடர்ந்து, வனச்சரகர்கள் சிவக்குமார், விஜய், குலோத்துங்கசோழன் மற்றும் வன ஊழியர்கள் மோப்ப நாய்க்கு கேக் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ