மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில், முதல் முறையாக கருப்பு கேரட் நாற்று உற்பத்திக்கு விதைவிதைக்கும் பணி துவங்கியது. குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்களின் நாற்றுக்கள் இங்குள்ள நர்சரியில் தயார் செய்யப்படுகிறது. தற்போது இங்கு முதன்முறையாக, அரசு தோட்டக்கலைத் துறை சார்பில், கருப்பு கேரட் உற்பத்திக்கான முயற்சி துவங்கப்பட்டது. இந்த கேரட் விதைகள் டில்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு, பூங்கா நர்சரியில் விதைக்கப்பட்டது. இதனுடன் தோட்டக் கலை துறை தயாரிக்கும் 'பேசில்லஸ் சப்டிவிஸ்' எனப்படும் மண்ணுயிர் உரம் சேர்க்கப்பட்டது. இதன் உற்பத்தி காலம், 3 முதல் மூன்றரை மாத காலமாகும். 'உத்திர பிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப்' உள்ளிட்ட பகுதிகளில் 'காலே கஜர் என அழைக்கும் இந்த கருப்பு கேரட்டில், கஜ்ரேலா, முரப்பா, அச்சார், கேக் போன்றவை தயாரிக்கப்படுகிறது. பஞ்சாபி மக்கள் காலே கஜர் கி கஞ்சி தயாரித்து உட்கொள்கின்றனர். பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில், '' இங்கு முதற்கட்டமாக சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்படும். இவற்றில் இருந்து விதைகள் சேகரித்து பல இடங்களிலும் தயார் செய்யப்படும்,'' என்றார்.
21-Oct-2025