உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

குன்னுார்: குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் வரும், 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி நாடு முழுவதும் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள், சுற்றுலா ஸ்தலங்களில் போலீசார் கண்காணித்து, சோதனை நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேலு உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று, குன்னுார் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் சிம்ஸ் பார்க் உள்ளிட்ட இடங்களில், நீலகிரியின் மோப்ப நாய் வெற்றி உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி கண்காணிப்பிலும் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி