மேலும் செய்திகள்
யானை தும்பிக்கை உரசி பாகன் காயம்
13-Nov-2024
ஊட்டி; ஊட்டி ரோஜா பூங்காவில் 'புரூனிங்' பணி நடந்து வருகிறது. ஊட்டி அரசு ரோஜா பூங்காவில், 4,301 வீரிய ரோஜா ரகங்களில், 40 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் கோடை சீசனுக்காக பூங்காவை தயார்படுத்தும் வகையில், பூங்காவில் உள்ள ரோஜா செடிகளை புரூனிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ரோஜா செடிகளில், அடுத்த ஆண்டு ஏப் ., மாதம் முதல் வாரத்தில் பூக்கள் பூத்து வாய்ப்புள்ளது.
13-Nov-2024