உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் காட்டெருமை ஓட்டம் உள்ளூர் மக்கள் அச்சம்

சாலையில் காட்டெருமை ஓட்டம் உள்ளூர் மக்கள் அச்சம்

குன்னுார், ; குன்னுார் அருவங்காடு சாலையில் ஓட்டப்பிடித்த காட்டெருமையால் மக்கள் அச்சமடைந்தனர்.குன்னுார் - ஊட்டி சாலை அருவங்காடு பகுதியில், சமீப காலமாக காட்டெருமைகள் சாலைகளில் உலா வருகின்றன. இவை அவ்வப்போது சாலையை கடந்து, உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுகின்றன.இந்நிலையில், காட்டெருமை ஒன்று சாலையில் ஓட்டம் பிடித்தது. அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்குள் செல்ல முயற்சி செய்ததால் உடனடியாக கேட் மூடப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து சாலையில் எம்.ஜி., காலனி அருகே புதர் செடிகளுக்குள் சென்றது. காட்டெருமைகள் ஆக்ரோஷத்துடன் உலா வருவதால், மக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ