உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் இயக்குவதில் பிரச்னை; அதிகரட்டியில் ஆர்ப்பாட்டம்

பஸ் இயக்குவதில் பிரச்னை; அதிகரட்டியில் ஆர்ப்பாட்டம்

குன்னுார்; அதிகரட்டியில் இருந்து ஊட்டி மற்றும் குன்னுார் இடையே தனித்தனியாக பஸ்களை இயக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெள்ளன் தலைமை வகித்து பேசுகையில், ''நீலகிரியில் பெரிய கிராமத்தில் ஒன்றான, அதிகரட்டியில் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம், 1ம் தேதி அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் அதிகரட்டியில் கொடியசைத்து, துவக்கி வைத்த அரசு பஸ், அதிகரட்டியில் இருந்து ஊட்டிக்கும், குன்னுாருக்கு தனித்தனியாக இயக்கப்பட்டது. சில தினங்களில் இந்த பஸ் நிறுத்தப்பட்டது. இந்த பஸ் மீண்டும் இயக்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்க வரும், 15ம் தேதி, ஊட்டி -மஞ்சூர் சாலை பாலகொலா சந்திப்பில் 6வது மைலில், மறியல் நடத்தப்படும்,'' என்றார். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை