சாலையின் குறுக்கே நின்ற பஸ்
பந்தலுார்: கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து, பாட்டவயல் வழியாக வயநாடு சுல்தான் பத்தேரிக்கு கேரளா மாநில அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.மாநில எல்லையில் உள்ள பாட்டவயல் சோதனை சாவடியை கடந்து, பத்தேரிக்கு செல்லும் வழியில் நுால்புழா என்ற இடத்தில், வேகமாக சென்ற பஸ் டிரைவர், எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுப்பதற்காக, பிரேக் பிடித்துள்ளார்.அப்போது, பஸ் சுழன்று சாலையின் குறுக்கே நின்றுள்ளது. பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதன் பின், பஸ் எடுத்து செல்லப்பட்டது.