உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலம் கடந்து வந்த பஸ்; காத்திருந்த மக்கள் அதிருப்தி

காலம் கடந்து வந்த பஸ்; காத்திருந்த மக்கள் அதிருப்தி

கோத்தகிரி; கோத்தகிரி- குன்னுார் இடையே, காலதாமதமாக பஸ் இயக்கப்பட்டதால், நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தனர்.கோத்தகிரி -குன்னுார் இடையே இரண்டு அரசு போக்குவரத்து கிளைகளில் இருந்து, பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழிதடத்தில், அதிக கிராமங்கள் உள்ளதால், அதிக எண்ணிக்கையிலான பயணிகள், அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.குறைந்தளவு பஸ்கள் இயக்கப்படுவதால், கோத்தகிரி பஸ் நிறுத்தத்தில் நாள்தோறும் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், முகூர்த்த நாளான நேற்று, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால்கடுக்க காத்திருந்த பயணிகள், குன்னுாரில் இருந்து தாமதமாக வந்த அரசு பஸ்சில் இருக்கை பிடிப்பதற்காக, முட்டி மோதினர். குழந்தைகளை வைத்திருந்தவர்கள் அவதிப்பட்டனர்.எனவே, பயணிகள் நலன் கருதி, குறித்த நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி