உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் இழுவை திறன் இல்லாத பஸ்கள்; விடுமுறை நாளில் பெயரளவிற்கு ஆய்வு

பந்தலுாரில் இழுவை திறன் இல்லாத பஸ்கள்; விடுமுறை நாளில் பெயரளவிற்கு ஆய்வு

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள், இழுவை திறன் இல்லாமல் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துகழக கூடலுார் கிளையில் இருந்து, பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில், பெரும்பாலான பஸ்கள் சமவெளி மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயக்கி, பழுதடைந்த பழைய பஸ்கள் இப்பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.குறைவான பஸ்களை இயக்கப்படும் நிலையில், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் நாட்களில், ஒவ்வொரு பஸ்சிலும், 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் குந்தலாடி மற்றும் கொளப்பள்ளி வழித்தடங்களில் இயக்கப்படும் சில பஸ்கள், போதிய இழுவை திறன் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டுப்பாங்கான பகுதிகளில் பயணிகள் இறங்கி நடந்து பின்னர் பஸ்களில் பயணிக்கும் சூழல் தொடர்கிறது. இதுகுறித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து, விடுமுறை நாட்களில் குறைவான பயணிகள் பயணிக்கும் நேரத்தில், போக்குவரத்து கழக பொறியாளர் இந்த பஸ்களில் பயணித்து, பெயர் அளவிற்கு ஆய்வு செய்கிறார். ஆய்வின் முடிவில் பஸ்கள் நல்ல இழுவை திறன் உள்ளதாக சான்றிதழ் அளிப்பதால், பயணிகளின் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதில்லை.எனவே, கூடுதல் பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் நல்ல நிலையில் உள்ள பஸ்களை, இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை