உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முட்டைகோஸ் அறுவடை: விவசாயிகள் ஆர்வம்

முட்டைகோஸ் அறுவடை: விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி ; கோத்தகிரி பகுதியில், முட்டைகோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், விவசாயிகள் மலை காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.நடப்பாண்டு, நல்ல மழை பெய்துள்ள நிலையில், அதிக பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளில், ஒரு கிலோ முட்டைக்கோஸ், 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டுக்கான செலவினங்கள் அதிகமாக இருந்தாலும், இந்த விலை விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது. உள்ளூர் கடைகளில், முதிர்ந்த மேற்பக்க இலைகள் உரித்த முட்டைக்கோஸ், 35 முதல், 40 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது.மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, மழை ஓய்ந்து, வெயிலான காலநிலை நிலவுகிறது.இந்நிலையில், வரும் நாட்களில், மழை தீவிரம் அடையும் பட்சத்தில், தயாரான முட்டைகோஸ் தோட்டத்திலேயே அழுகி விடும் நிலை உள்ளது.இதனை தவிர்க்க, வெயில் நாட்களில் முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ