சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ஊட்டி, ; கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனம், அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தகத்திற்கான சான்றிதழ் படிப்பினை நடத்தி வருகிறது. சான்றிதழ் படிப்பு ஜூன், 2025 முதல் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் , https://www.editn.in/ web-one - year -Registration வாயிலாக, 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., தொழில் கல்விதொழில் பயிற்சி முடித்தவர்கள் சேர தகுதி உடையவர்கள். தொழில் முனைவோராக ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த படிப்பில் சேர்ந்து பயனடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.