உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெயர் சேர்க்கை, திருத்தம் செய்வதற்கான முகாம்

பெயர் சேர்க்கை, திருத்தம் செய்வதற்கான முகாம்

பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாமில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில், 'பெயர் சேர்ப்பவர்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், ஆதார் எண் இணைத்தல்,' உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வாக்காளர்கள், சிறப்பு முகாம்களில் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இந்த பணிகளில் தேர்தல் நிலை அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் குறித்து பந்தலுார் தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !