உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் பஜாரில் சுத்தம் செய்யப்பட்ட கால்வாய்; தினமலர் செய்தி எதிரொலி

பந்தலுார் பஜாரில் சுத்தம் செய்யப்பட்ட கால்வாய்; தினமலர் செய்தி எதிரொலி

பந்தலுார்; பந்தலுார் பஜாரில் கால்வாய்கள் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டன. நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பந்தலுார், பஜார் பகுதியில் கால்வாய்கள் கழிவுகள் நிறைந்து, துர்நாற்றம் வீசி வருவதுடன், புழுக்கள் உற்பத்தியாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும், நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்திய போது, அது குறித்து கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தொடர்ந்து, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், கால்வாய்கள் முழுமையாக துார்வாரி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பஜார் பகுதியில் துர்நாற்றம் கட்டுக்குள் வந்துள்ளது.வியாபாரிகள் கூறுயைில், '' இங்கு ஒரு சில இடங்களில் கால்வாய்கள் முழுமையாக இடிந்து கழிவுகள் செல்ல வழி இல்லாத நிலையில், அதனை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை