உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராணுவ பகுதியில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பணி ரத்து

ராணுவ பகுதியில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பணி ரத்து

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் ராணுவ மைய பகுதியில் உள்ள கடைகள், கன்டோன்மென்ட் சார்பில் வியாபாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வாடகை வசூலிக்கப்படுகிறது. இங்கு, ராணுவ குடும்பத்தினர், வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு, கன்டோன்மென்ட் வாரியம் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதனால், பொருட்கள் வாங்க வருபவர்கள், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், பாதிக்கப்பட்டனர். வியாபாரமும் பாதிக்கப்பட்டதுடன், மக்களுக்கும்; டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. தொடர்ந்து, வாரிய முன்னாள் துணைத்தலைவர் வினோத் குமார் மற்றும் வியாபாரிகள், ராணுவத்தினர் வாரியத்திடம் புகார் தெரிவித்தனர்.தொடர்ந்து, கடந்த மாதம், 29ல், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் கிருஷ்ணேந்து தாஸ், வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினீத் பாபாசாகிப் லோட்டே ஆகியோர் முன்னிலையில் நடந்த வாரிய கூட்டத்தில், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை கைவிடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வியாபாரிகள் உட்பட அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர். அதே நேரத்தில், 'ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தக்கூடாது' என்பதற்காக, குறிப்பிட்ட இடங்களில், 'நோ பார்க்கிங்' போர்டு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ