உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கார் மோதி விபத்து: 5 மாணவர்கள் காயம்

கார் மோதி விபத்து: 5 மாணவர்கள் காயம்

பாலக்காடு: பாலக்காடு அருகே, கார் மோதியதில் ஆட்டோவில் சென்ற ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோங்காடு அருகே உள்ளது சல்லிக்கல் பகுதி. இங்கு நேற்று காலை 8:45 மணிக்கு, முண்டூர் நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டு இழந்து எதிரே பள்ளி மாணவர்களுடன் வந்த ஆட்டோவில் மோதியது. இதில், கோங்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்களான முகமது ஹிஸ்புல்லா, 11, சனபாத்திமா, 11, ஏழாம் வகுப்பு மாணவி சனபாத்திமா, 12, நான்காம் வகுப்பு மாணவர்களான முகமது மின்ஹாஜ், 9, ஹஸ்னா, 9, ஆகியோர் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள், காயமடைந்த மாணவர்களை மீட்டு, கோவை மற்றும் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கோங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டிய ஆலத்தூரை சேர்ந்த ஸ்ரீஜித் உன்னி, 20, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை