உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் உலா வரும் கால்நடைகள்; போக்குவரத்துக்கு இடையூறு

சாலையில் உலா வரும் கால்நடைகள்; போக்குவரத்துக்கு இடையூறு

கூடலுார்;கூடலுார் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக, உலா வரும் கால்நடைகளால், டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் நகரம், தமிழகம், கேரளா, கர்னாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும். கேரளா, கர்நாடக மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், இவ்வழியாக, நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு வந்து செல்கின்றனர்.இதனால், நகரில் எப்போதும் வாகன போக்குவரத்து, நெரிசல் அதிகமாக இருக்கும். அதில், மூன்று மாநில சாலைகள் பிரிந்து செல்லும், பழைய பஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, போக்குவரத்து போலீசார், 'சிக்னல்' உதவியுடன் போக்குவரத்து சீரமைத்து வருகின்றனர்.இந்நிலையில், நகர சாலையில், அடிக்கடி உலா வரும் ஆடு உள்ளிட்ட கால் நடைகளால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.டிரைவர்கள் கூறுகையில், 'நகரில் போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் உலா வருகின்றன. இதனால் வாகன நெரிசல் மட்டுமின்றி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ