உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி காலநிலையில் மாற்றம்; கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி காலநிலையில் மாற்றம்; கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டி; 'பெஞ்சல்' புயல் எதிரொலியாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், 'பெஞ்சல்' புயல் காரணமாக கன மழை பெய்தது. புயலின் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களாக, நீலகிரி மாவட்டத்திலும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.காலை நேரங்களில் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை, 11 டிகிரி செல்சியசாக இருப்பதால் கடும் குளிர் நிலவுகிறது. மேக மூட்டத்துக்கு இடையே சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால், ஊட்டி நகரில் காலை, 10:00 மணி வரை, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், ஊட்டி உட்பட புறநகர் பகுதிகளில் மலை காய்கறி தோட்டம், தேயிலை தோட்ட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் சாரல் மழையுடன் கடும் குளிர் நிலவுவதால், பணிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினர். மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமாக சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ