குன்னுார் காலநிலையில் மாற்றம்: மேக மூட்டம்
குன்னுார்: குன்னுார் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மழையின் தாக்கம் குறைந்தது. 'காலையில் வெயிலும், பகலில் மேகமூட்டமும், மாலையில் மழையும்,' என, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதே சமயம், லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் பகுதிகளில் கடும் மேகமூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை முழுமையாக ரசிக்க முடியாமல் திரும்புகின்றனர்.மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலவும் மேகமூட்டம் இடையே புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். வெவ்வேறு காலநிலை நிலவும் நிலையில், காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரிக்கும் என்பதால், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை மட்டும் குடிக்க, சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.