உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அறிவிப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அறிவிப்பு

ஊட்டி; மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கள் நடைபெறும் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா அறிக்கை: ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி., மைதானத்தில், இன்று கல்லுார் மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டிகள்; 26 , 27 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி; 31ம் தேதி பொதுப் பிரிவு கையுந்து போட்டிகள் நடக்கிறது. செப்., 1, 2ம் தேதிகளில் கல்லுாரி பிரிவு கால்பந்து போட்டிகள்; 3ம் தேதி அரசு ஊழியர் பிரிவில் ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகள் நடக்கிறது. செப்., 8ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள்; 9ம் தேதி கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு தடகளப் போட்டிகள் நடக்கிறது. 10ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான அனைத்து விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 11ம் தேதி பள்ளி கல்லுாரி மற்றும் பொது பிரிவு சிலம்ப போட்டிகள்; அரசு ஊழியர் பிரிவில் கையுந்து பந்து போட்டிநடக்கின்றன. ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில், 29, 30ம் தேதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இறகுப்பந்து போட்டிகள் நடக்கிறது. போட்டிகள், ஊட்டி லாரன்ஸ் பள்ளி; அருவங்காடு கார்டைட் பேக்டரி ஷகானி மைதானம்; கூடலுார் மார்த்தோமா மைதானம்; ஊட்டி குட்ஷெப்பர்ட் பள்ளி; குன்னுார் புனித ஜோசப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடக்கிறது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை