உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழந்தைகள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

குழந்தைகள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

பந்தலுார் : பந்தலுார் நகராட்சி அலுவலக வளாகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி பணியாளர் சிந்துஜா வரவேற்றார். நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணியாளர் தவமணி பேசியதாவது: நாட்டில் சமீப காலமாக குழந்தைகள் மீதான தாக்குதல்கள், பல்வேறு வகையிலும் அதிகரித்து வருகிறது. குழந்தைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது மற்றும் அவர்களை தொல்லைப்படுத்துவது, பாலியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது, குடும்ப பிரச்னையின் காரணமாக குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட தாக்குதல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும்.மேலும், குழந்தைகள், பெண்கள், முதியோர் ஏதேனும் பாதிப்புகளுக்கு உட்பட்டால், 1098, 181, 123456 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், தகவல் தருபவரின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ருக்மணி, 'நாவா சைல்டு பண்ட்' திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா ஆகியோர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கல்வியில் மேம்படுத்திட நடவடிக்கை எடுத்தால், பாதிப்புகள் குறைய வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபாணி, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் உட்பட தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர். நகராட்சி மேலாளர் சுகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை